அரைக்கால் டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் அசாமை ஆளக்கூடாது – ராகுல் காந்தி

 

அரைக்கால் டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் அசாமை ஆளக்கூடாது – ராகுல் காந்தி

அசாமை அரைக்கால் டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் ஆளக்கூடாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையைில் கூறியதாவது: மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. பா.ஜ.க. எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் வெறுப்பை பரப்புகிறது.

பா.ஜ.க.

அசாமில் இளைஞர்கள் போராடுகின்றனர். மற்ற மாநிலங்களில் இதுதான் நடக்கிறது. போராட்டங்கள் எல்லாம் நிகழ்கிறது. நீங்கள் ஏன் அவர்கள் மீது ஏன் துப்பாக்கிச்சூடு நடத்துகிறீர்கள் மற்றம் அவர்களை கொல்கிறீர்கள்?, மக்களின் குரலை கேட்க பா.ஜ.க. விரும்பவில்லை. பா.ஜ.க.வின் கொள்கைகளால் அசாம் வன்முறை பாதைக்கு திரும்பி விடுமோ என நான் பயப்படுகிறேன்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

அசாமின் வரலாறு, மொழி மற்றும் கலாச்சாரத்தை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறிவைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாக்பூர் அசாமை ஆளக்கூடாது. டவுசர் அணிந்த ஆர்.எஸ்.எஸ். நபர் அசாமை ஆளக்கூடாது. மாநிலத்தின் மக்களால் அசாம் ஆளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.