அருந்ததி 2 படத்தில் அனுஷ்காவிற்குப் பதில் இவர் தானாம்? 

 

அருந்ததி 2 படத்தில் அனுஷ்காவிற்குப் பதில் இவர் தானாம்? 

அருந்ததி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: அருந்ததி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அருந்ததி. மறைந்த கொடி ராமகிருஷ்ணா இயக்கி இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. இதில் அனுஷ்காவுடன் சோனு சூத், சாயாஜி சிண்டே ஆகியோர் நடித்திருந்தனர். 

இந்த நிலையில், அருந்ததி 2 படத்தை உருவாக்க முயன்று வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாகத்தின் இயக்குநர் கொடி ராமகிருஷ்ணா மறைந்த நிலையில், முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

anushka

தற்போது இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்களித்த அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் தேவைப்படும் நிலையில், அனுஷ்கா இப்படத்தின் ஒப்பந்தத்தை மறுத்துள்ளார். அதனால் அனுஷ்காவிற்குப் பதிலாக பாயல் ரஜ்புட் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.