அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மம்தா பானர்ஜி….

 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மம்தா பானர்ஜி….

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

ஒரு சாமானிய மனிதனாலும் அரசியலில் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு நல்ல உதாரணமா தற்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சொல்லலாம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, ஊழலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போராடியதை பாராட்டி 2006ம் ஆண்டில் அவருக்கு ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரமோன் மகசேசே விருதுடன் அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. 3 இடங்களை பா.ஜ. கைப்பற்றியது. 

மம்தா பானர்ஜி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரியானாவில் 1968 ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். அவருக்கு இன்று 51வது பிறந்த நாள். கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பா.ஜ. எம்.பி. ராஜீவ் சந்திரசேகரும் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

மம்தா பானர்ஜியின் பிறந்த நாள் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார். ரொம்ப நன்றி சகோதரி என மம்தா பானர்ஜிக்கு பதில் டிவிட் செய்து இருந்தார்.