அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை : நோயாளிகள் அதிர்ச்சி..!

 

அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட காலாவதியான மாத்திரை : நோயாளிகள் அதிர்ச்சி..!

எதேர்ச்சியாக அந்த மாத்திரையைச் சோதித்துப் பார்த்ததில் அந்த மாத்திரை காலாவதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை,எளிய மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசு மருத்துவமனைகளின் மீதான குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணமே உள்ளது. சரியான பராமரிப்பு இல்லை, சிகிச்சை ஒழுங்காக அளிப்பது இல்லை எனப் பல புகார்கள். அனைத்தையும் அறிந்தும் இன்னும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. 

hospital

ஓசூர், காமன் தொட்டி என்னும் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் உள்ளது. இப்பகுதியைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் இங்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று பிரகாஷ் என்பவர் காய்ச்சலுக்காக மாத்திரை வாங்கலாம் என்று ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு மாத்திரை வழங்கப் பட்டுள்ளது, எதேர்ச்சியாக அந்த மாத்திரையைச் சோதித்துப் பார்த்ததில் அந்த மாத்திரை காலாவதியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து பிரகாஷ் மருத்துவமனையிலிருந்த நோயாளிகளிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

expired date

அந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் நோயாளிகளைச் சாரியாகக் கவனிப்பதில்லை என்றும் செவிலியர்கள் நோயாளிகளை எரிச்சலுடன் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய, சுகாதார இயக்கத்தின் துணை இயக்குநர், இதுவரை காலாவதியான மாத்திரைகள் வழங்குவது குறித்து எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு மக்கள் புகார் அளித்தால் மருத்துவர்கள் மீதும் செவிலியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார்.