அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்று, விபத்தில் உயிரிழந்த மாணவன் !

 

அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்று, விபத்தில் உயிரிழந்த மாணவன் !

திருத்தணியில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இப்போதெல்லாம் பைக் என்பது பல இளைஞர்களுக்குக் கனவாக இருப்பதனால், அதனை வேகமாக ஓட்டுவது, முன்னால் போகும் வாகனத்தை முந்த முயல்வது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இளைஞர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதே போலத் திருத்தணியில் முன்னால் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞர், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

திருவள்ளூர் மாவட்டம், மேல் திருத்தணி பகுதியைச் சேர்ந்த திருமால் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் (18). இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கி அங்கேயே பயின்று வரும் நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்றதும், தனது நண்பனைப் பார்ப்பதற்காக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளார். 

ttn

இவர் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சந்தான கோபாலபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அதனை சந்தோஷ்குமார் முந்திச்செல்ல முயன்ற போது, எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் லாரியின்  அடியில் சிக்கிக் கொண்ட சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.