அரசு பள்ளிகளில் நலப்பணிகளை செய்யும் விஜய் ரசிகர்கள்! 

 

அரசு பள்ளிகளில் நலப்பணிகளை செய்யும் விஜய் ரசிகர்கள்! 

தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததையடுத்து தற்போடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்றுவருகிறது

தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததையடுத்து தற்போடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்றுவருகிறது.  பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து விஜய் ரசிகர் விதைபந்து வழங்குவது, பள்ளிகளுக்கு நல உதவிகள் செய்வது, சிசிடிவி கேமராக்கள் வழங்குவது  போன்ற சேவையை செய்துவருகின்றனர். 

Vijay makkal iyakkam

இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் இளைஞர் அணி தலைமை தளபதி மக்கள் இயக்கத்தின் மூலம்  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட  10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை சீரமைப்பு, சிசிடிவி கேமரா பொருத்துதல் , நூலகம் அமைத்தல், சுவர் ஓவியம் வரைதல், கணினி வழங்குதல், தண்ணீர் வசதி உள்ளிட்ட 5,00,000 மதிப்பிலான பணிகளை செய்ய அம்மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான பணியை அடுத்த மாதத்திலிருந்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.