அரசு பணிகளில் இருப்போர் 2 ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை! 

 

அரசு பணிகளில் இருப்போர் 2 ஆவது திருமணம் செய்தால் நடவடிக்கை! 

அரசு பணிகளில் இருப்போர், முதல் மனைவி அனுமதியின்றி 2 வது திருமணம் செய்ததால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

அரசு பணிகளில் இருப்போர், முதல் மனைவி அனுமதியின்றி 2 வது திருமணம் செய்ததால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

தேன்மொழி என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவல் துறையில் உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்ற தனது கணவர், தன்னை 2வதாக திருமணம் செய்தது சில ஆண்டுகளுக்கு பின்னரே தெரியவந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் கணவர் தற்போது உயிரிழந்ததாக குறிப்பிட்ட அவர், ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்,  அரசு பணிகளில் இருப்பவர்களே இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்றும், அரசு ஊழியர்கள் இரு திருமணங்களை செய்து கொள்வது நன்னடத்தை இல்லை என்றும் கூறினார். இதுபோன்ற பிரச்னைகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுத்தல் மட்டுமே தீர்வு எட்டப்படும் என்றும் குறிப்பிட்டார். மனைவி இறந்தால் தவிர மற்ற காரணத்திற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு அரசின் எந்த சலுகையும் கிடைக்காது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 

மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்தது தொடர்பான புகார்கள் எழுந்தால், துறை ரீதியிலான நடவடிக்கை எடுப்பதுடன், குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.