அரசு ஊழியர் குடும்பத்தினரா..? இந்தாங்க ரூ. 20 லட்சம்..!

 

அரசு ஊழியர் குடும்பத்தினரா..? இந்தாங்க ரூ. 20 லட்சம்..!

இறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டது அல்ல. நமது வாழ்விற்குப் பிறகு நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய இந்த பணம் நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது 58 வயதிற்குள் அகால மரணம் அடைந்தால் அவர் குடும்பத்திற்கு 20 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது கார்பரேஷன் வங்கி.  

இந்தியாவில் பல கிளைகளுடன் 130 வருடங்களாக செயல்பட்டு வரும் கார்ப்பரேஷன் வங்கியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறுவதற்காக தனியாக ஒரு சேமிப்பு கணக்கை கார்ப்பரேஷன் வங்கியில் தொடங்கினால், 20 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும் என்கிறார்கள் அந்த வங்கி நிர்வாகிகள்.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்  அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் காலத்தில் இறப்பு நேர்ந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்குமாம்.

இந்த 20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்காக பிரீமியமாக யாரும் ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்த தேவையில்லை எனவும், வங்கியில் அவர்களின் ஊதியம் மட்டும் அந்தக் கணக்கில் வரவு வைக்கப்பட்டால் போதும் என்றும் கூறுகிறார்கள்.

corporation

 இந்தச் சம்பள கணக்கில் ஒரு ரூபாய் கூட இருப்பு இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும். வேறு எந்த வங்கியிலும் வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்ற கடன்கள் பெற்றிருந்தாலும் மாத ஊதியத்தை இங்கே பெற்று இந்த திட்டத்தில் சேரலாம்.

130 ஆண்டுகளைக் கடந்து உள்ளதால் வங்கியின் மூலமாக இந்த சிறப்பு திட்டம் நவம்பர், டிசம்பர் இரண்டு மாதங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி பலருக்கு தெரியாத நிலையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

இறப்பு என்பது நிர்ணயிக்கப்பட்டது அல்ல. நமது வாழ்விற்குப் பிறகு நம்மை சார்ந்துள்ள குடும்பத்தினரின் பொருளாதார தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்ய இந்த பணம் நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.