அரசுப் பள்ளிகளில் இருக்கும் சத்துணவு பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை!

 

அரசுப் பள்ளிகளில் இருக்கும் சத்துணவு பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை!

சத்துணவு வழங்க இருப்பில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அப்படியே கிடக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முதலில் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் மூன்றாவது முறையாக மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி,கல்லூரிகள் வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

ttn

இதனிடையே தமிழகம் முழுவதிலும் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்க இருப்பில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அப்படியே கிடக்கின்றன. அதனால் அந்த பொருட்களை உபயயோகப்படுத்தும் விதமாக அவற்றை பாதுகாப்பான முறையில் வைக்குமாறு சென்னை மாநகராட்சி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், அரசு, அரசு உதவி பெரும் மற்றும் ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள சத்துணவு பொருட்களை பயன்படுத்தும் விதமாக உலர்த்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.