அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்…தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா?

 

அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்…தமிழக பட்ஜெட்டில் இடம்பெறுமா?

தேவையான  சலுகைகளையும் அரசு வழங்கி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்றி வருகிறது எனலாம்

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. 

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது.குறிப்பாக பள்ளி மாணவர்களுக்குத் தேவையான  சலுகைகளையும் அரசு வழங்கி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்றி வருகிறது எனலாம். 

ttn

 
அந்த வகையில் தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. மதிய சத்துணவுத் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் அதை விரிவுபடுத்தும் நோக்கோடு  காலை உணவுத்திட்டம் அறிவிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இருக்கும் காலை உணவுத் திட்டத்தை  விரிவுபடுத்தும் முயற்சியாக இது இருக்கும் என்று நம்பப்படுகிறது. 

ttn

வசதியற்ற, வறுமையில் இருக்கும்  குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் என்பது எப்படி வரப்பிரசாதமாகப் பார்க்கப்பட்டதோ, அதேபோல் இந்த் திட்டமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.