அரசுக்கு கொஞ்சம் வருவாய் கிடைக்கும்…..மது கடைகளை திறக்க உடனே அனுமதி கொடுங்க….. நவநிர்மான் சேனா கோரிக்கை

 

அரசுக்கு கொஞ்சம் வருவாய் கிடைக்கும்…..மது கடைகளை திறக்க உடனே அனுமதி கொடுங்க….. நவநிர்மான் சேனா கோரிக்கை

மகாராஷ்டிராவில் மது கடைகள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்களை திறக்க உடனே அனுமதி கொடுங்க. இதன் மூலம் அரசுக்கு கொஞ்சம் வருவாய் கிடைக்கும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் நம் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி விட்டது. மேலும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கி கொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க  லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் குறைந்து போனது.

மதுபான கடை

இந்த சூழ்நிலையில், மதுபான கடைகள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்களை திறக்க மாநில அரசு உடனடியாக அனுமதி கொடுக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில முதல்வரும், தனது உறவினருமான உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: லாக்டவுன் மே 3ம் தேதி லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் லாக்டவுன் எப்போது விலக்கப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

முதல்வர் உத்தவ் தாக்கரே

இது போன்ற நேரங்களில் மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கான விருப்பதை தேர்வு செய்வதில் தவறில்லை. மதுபானக் கடைகளை திறப்பதன் பின்னணியில் உள்ள யோசனை மது குடிப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதல்ல, மாறாக அரசாங்கம் வருமானம் ஈட்ட தொடங்குவதற்காக. மாநில அரசுக்கு மதுபானம் மீதான கலால் வரி வாயிலாக தினமும் ரூ.41.66 கோடி அல்லது மாதத்துக்கு ரூ.1,250 கோடி மற்றும் ஆண்டுக்கு  சுமார் ரூ.14,000 கோடி கோடி வருவாய் கிடைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.