அரசியல் கட்சி பிரமுகர்கள் வெளியேற வேண்டும் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளை முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த ஊராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஐந்து மணிக்கு நிறைவடைய உள்ள நிலையில், அந்த பகுதிக்கு சம்பந்தப்படாதவர்கள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளை முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், “தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் அனைவரும் அந்த ஊராட்சிப் பகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேறாதவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

election-campaign

முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. அந்த பகுதிகளுக்கான பிரசாரம் டிசம்பர் 25ம் தேதி மாலை 5 மணியோடு முடிகிறது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 30ம் தேதி நடைபெறுகிறது. இந்த பகுதிகளுக்கான பிரசாரம் 28ம் தேதி மாலை 5 மணியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.