அரசியல் கட்சி இருக்கா… இப்போதைக்கு இல்லையா? – குழப்பிய ரஜினிகாந்த்

 

அரசியல் கட்சி இருக்கா… இப்போதைக்கு இல்லையா? – குழப்பிய ரஜினிகாந்த்

இதுநாள் வரை வீட்டு வாசலில் பேட்டி அளித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த், இன்று நட்சத்திர ஹோட்டலில் பேட்டி அளித்துள்ளார். பேட்டி என்று சொல்வதைவிட, தான் பேச நினைத்ததைப் பேசிவிட்டு சென்றுவிட்டார். நிருபர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றது நிருபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தால்தான் அரசியல் கட்சி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இதுநாள் வரை வீட்டு வாசலில் பேட்டி அளித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த், இன்று நட்சத்திர ஹோட்டலில் பேட்டி அளித்துள்ளார். பேட்டி என்று சொல்வதைவிட, தான் பேச நினைத்ததைப் பேசிவிட்டு சென்றுவிட்டார். நிருபர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றது நிருபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

rajinikanth-political

ரஜினிகாந்த் தன்னுடைய பேட்டியின்போது, “மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி அறிவிப்பு வரும். மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்ல வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன்” என்றார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற எழுச்சி இருந்தால் மட்டுமே கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி கூறினாரா என்று பலரும் மண்டையைப் போட்டு குடைந்து யோசித்து வருகின்றனர்.