அரசியலைவிட்டே விலகினார் குமாரசாமி! 

 

அரசியலைவிட்டே விலகினார் குமாரசாமி! 

கர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

கர்நாடக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்துள்ள குமாரசாமி, அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெருபான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்வராக காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.  இதனால் மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். ஆனால் சில காங்கிரஸ் கட்சியினர் இத்தகைய முடிவுக்கு அதிருப்தி தெரிவித்தனர். அப்போதிலிருந்தே பிரச்னை நடைபெற்றுவந்த நிலையில் ஒரு வருடம் தான் ஆட்சியை ஓட்டமுடிந்தது.  ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த 14 ஆவது மாதத்திலேயே 14 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அதன்பின் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர், தற்போது அரசியலில் இருந்தே விலகுவதாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  “நான் அரசியலில் இருக்கும்போது சிறப்பாகவே பணியாற்றினேன், இனி நானும் எனது குடும்ப வாரிசுகளும் அரசியலுக்குள் வரமாட்டோம். மக்கள் மனதில் இடம்பிடிக்கவே விரும்புகிறேன். தற்போதைய அரசியல் ஜாதி மோகம் பிடித்தது. இதில் நான் இருக்க விரும்பவில்லை.. என்னை அமைதியாக வாழ விட்டுவிடுங்கள்” எனக் கூறினார்