அரசியலில் கமல் எனக்கு போட்டியா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

 

அரசியலில் கமல் எனக்கு போட்டியா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்!

அரசியலில் கமல்ஹாசனை எனக்கு போட்டியாளராக கருதவில்லை  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசியலில் கமல்ஹாசனை எனக்கு போட்டியாளராக கருதவில்லை  என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காலூன்றி வருடங்கள் பல கடந்தாலும் இன்னும் இளமை மாறாத துடிப்பு, ஸ்டைல் என மக்கள் மனதில் ஒரே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.புதிய அரசியல் கட்சி பணிகள், சினிமா ஷூட்டிங் என பரபரப்பாக இயங்கி வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஆனால் மேற்கொண்டு எந்த பணிகளும் நடப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. அதேநேரத்தில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியா டுடே இதழுக்கு பேட்டி அளித்துள்ள அவரிடம், அரசியலில் கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘அரசியலில் அவரை எனக்கு போட்டியாளராக கருதவில்லை. அவர் எனக்கு சக நடிகர். நல்ல நண்பர். அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு 67 வயதாகிறது, இந்த வயதில் அரசியலில் நுழைவது எளிதல்ல’ என்று விளக்கமளித்துள்ளார்.