அரசின் விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த நபர்.. அதிரடியாக கைது செய்த போலீசார்!

 

அரசின் விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த நபர்.. அதிரடியாக கைது செய்த போலீசார்!

நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் என அனைத்தும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து மற்றும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்களின் மூலமாகவே கொரோனா அதிகமாக பரவுவதால் அவர்கள் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  

ttn

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் வெளியே திரிந்தால் பாஸ்போர்ட் ரத்து  செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் வெளியே திரிவதால், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். 

 இந்நிலையில் துபாயில் இருந்து திரும்பிய கட்டட பொறியாளர் ஒருவர் அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவரை கோடம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது