அரசாங்கம் முறையாக செயல்படவில்லை என்றால் திமுக அதனை செய்ய வைக்கும்: மு.க ஸ்டாலின்

 

அரசாங்கம் முறையாக செயல்படவில்லை என்றால் திமுக அதனை செய்ய வைக்கும்: மு.க ஸ்டாலின்

எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு சிறப்பாக போராடி வருவதாகவும் இந்தியாவுக்கே முன் உதாரணமாக தமிழகம் விளங்குவதாகவும் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதனை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதில் அளித்து ஸ்டாலின் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுருக்கிறார். 

ttn

அதில், அதிமுக அரசு முறையாக செயல்படாத பட்சத்தில் அதனை திமுக செய்ய வைக்கும். இந்த பேரிடர் காலத்தின் போது எந்த வித திசை திருப்பலும் இன்றி, அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைக்க திமுக தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுகவை கொச்சைப்படுத்துவதை விட்டு விட்டு இந்த பேரிடர் காலத்தில் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து மனித குலம் நடுங்கி நிற்கும் இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.