அய்யப்ப பக்தர்கள் வாட்ஸ்-அப்பில் அவதூறு: சீமான் மீது போலீசில் புகார்

 

அய்யப்ப பக்தர்கள் வாட்ஸ்-அப்பில் அவதூறு: சீமான் மீது போலீசில் புகார்

அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி: அய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களின் போராட்டத்திற்கு பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் பாஜக சார்பில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
 
இந்நிலையில், அய்யப்ப பக்தர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசுவது போன்ற ஒரு ஆடியோ வாட்ஸ்-அப்பில் வெளியாகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றிய அகில பாரத இந்து மகாசபா தலைவர் தமிழ்வாணன் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், அய்யப்ப பக்தர்களை அவதூறாகப் பேசி வாட்ஸ்-அப்பில் கருத்து பதிவிட்ட சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்வாணனின் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் முத்துராஜ், இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.