அயோத்தி தீர்ப்பு… இதை மட்டும் செய்து விடாதீர்கள் மக்களே… மீறினால் சிறை தான்..!

 

அயோத்தி தீர்ப்பு… இதை மட்டும் செய்து விடாதீர்கள் மக்களே… மீறினால் சிறை தான்..!

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலர்ட்டாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்திற்கு 3 அமைப்புகள் உரிமை கொண்டாடிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ayodhya

இதனையொட்டி நாடு முழுவதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பையொட்டி, உ.பி.,யில் தற்காலிக சிறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உ.பி.,யில் கொண்டாட்டங்கள் மற்றும் துக்கம் அனுசரிக்கக் தடை விதிக்கப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. 

ayodhya

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலர்ட்டாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டு கொண்டுள்ளது.

அயோத்தியில் 4 ஆயிரம் துணை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.ayodhya

போலி செய்திகள், மார்பிளிங் படங்கள் மற்றும் திருத்தங்கள் செய்த வீடியோ உள்பட எந்தவொரு வேண்டதகாத செய்திகளை பரப்பினால் அவற்றுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ் -அப், சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்ப்ட்டு வருகின்றன. ஆகையால் அவதூறு செய்திகள், புகைப்படங்களை பரப்புவதை தவிர்த்தே ஆக வேண்டும். இல்லையிஎனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம் எனச் சொல்லப்படுகிறது.