அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக முதன் முதலில் பக்தர்கள் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக முதன் முதலில் பக்தர்கள் கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக முதன் முதலில் பக்தர்கள் ஒரு ரூபாய் 25 காசுகளை நன்கொடையாக வழங்கினர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் விஷ்வ இந்து பரிஷத் உறுதியாக உள்ளது. 1984 முதல் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த ஆண்டில் ராமர் கோயிலுக்காக அடித்தள சடங்கை (ஷிலா புஜன்) வி.எச்.பி. மேற்கொண்டது. அதன் பிறகு கோயில் கட்டுமானத்துக்காக பக்தர்கள் நன்கொடை வழங்க தொடங்கினர். இதுவரை கோயில் கட்டுமானத்துக்காக சுமார் ரூ.8 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக வி.எச்.பி. தகவல் தெரிவித்துள்ளது.

கோயில் மாடல்

வி.எச்.பி. அலுவலக பொறுப்பாளர்கள் இது குறித்து கூறுகையில், ராமர் கோயில் கட்டுமான பணிக்காக தொடக்க நன்கொடையாக பக்தர்களிடம் ஒரு ரூபாய் 25 காசுகள் பெறப்பட்டது. இதுவரை கோயில் கட்டுமான பணிக்காக மொத்தம் ரூ.8 கோடியை நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர் என தெரிவித்தனர்.

விஷ்வ இந்து பரிஷத்

தற்போது ராமர் கோயில் கட்டுவதற்கான தடைகள் நீங்கி விட்டதால், இனி கோயில் கட்டுவற்கான பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் பக்தர்களும் கோயில் கட்டுமானத்துக்காக நன்கொடையை அள்ளி வழங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வி.எச்.பி. ராமர் கோயில் கட்டுமான பணிகளை 1990 முதல் வி.எச்.பி. மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.