அம்மியில் தட்டிப்போட்ட நாட்டுக்கோழி ரசம்!

அம்மியில் தட்டிப்போட்ட நாட்டுக்கோழி ரசம்!

இது கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டிய ரசம். அம்மி இருந்தால் சிறப்பாக அமையும்.நாட்டுக்கோழியை அறுத்து ,சுடு தண்ணீரில் முக்கி எடுத்தால் அதன் உடலில் உள்ள இறகுகளை சுலபமாக நீக்கிவிடலாம்.பிறகு அதை தீயில் வாட்டுங்கள்.இதனால் கைக்குச் சிக்காத சிறு மயிர்களும் கருகி களையப்பட்டு விடும்.இப்போது அதை நீரால் கழுவி விட்டு முழுக் கோழியை ஏழெட்டு பெரிய துண்டுகளாக வெட்டி அந்தத் துண்டுகளை ஓவொன்றாக அம்மியில் வைத்து அதன் எலும்புகள் உடையும்படி தட்டிக் கொள்ளுங்கள்.

வாருங்கள் ரசம் வைப்போம்.

chicken rasam

தேவையான பொருட்கள் :

 ( மிளகு அரைக்க)
சின்ன வெங்காயம் ¼ கிலோ ( தட்டி வைக்கவும்)
பூண்டு 10 பல்
இஞ்சி 1பெரிய துண்டு.
மிளகு 1 ஸ்பூன்
சோம்பு 1 ஸ்பூன் ( வறுத்தது)
காய்ந்த மிளகாய்
கொத்தமல்லி விதை 3 ஸ்பூன் ( வறுத்தது )
இவை அனைத்தையும் தனித்தனியாக மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதுதவிர,

ஒரு தக்காளி
பச்சை மிளகாய் 4
மஞ்சள் தூள்
உப்பு 
நல்லெண்ணெய் 
கருவேப்பிலை

rasam

முதலில் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்  ஊற்றி சோம்பு , பச்சை மிளகாய் , கைப்பிடி அளவு வெங்காயம் ,இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சிறிதளவு,வெட்டி வைத்த தக்காளி இவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்,சிறிது உப்புச் சேர்த்து,தட்டி வைத்துள்ள சிக்கனை போட்டு கிளறி விட்டு மூடி போட்டு,10 நிமிடம் வேக விடுங்கள்.மறுபடியும் மூடியைத் திறந்து அதில் அரைத்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ,அத்துடன் ஒரு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் சேர்த்து மேலும் 10 நிமிடம் வேகவிட்டால் நாட்டுகோழி தட்டிப்போட்ட ரசம் ரெடி.இதை குழைந்த சோற்றில் விட்டு பிசைந்து சாப்பிடவும்.அல்லது,ஒரு டம்ளரில் ஊற்றி,அத்துடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூப் போல சாப்பிடலாம்.