“அம்மா சத்தியமா நான் அத பண்ணல..” கதறும் ஸ்ரீசாந்த்!!
“என் குடும்பத்தினர் மீது சத்தியமாக சொல்கிறேன்.. நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை..!” என கதறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் மற்றும் சிலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு சில ஆதாரங்கள் இவருக்கு எதிராக இருந்ததால், பிசிசிஐ இவரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்நாள் தடை விதித்தது.

தன் மீது எவ்வித தவறும் இல்லை என்றும், விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரியும் ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் ஸ்ரீசாந்த். அங்கு தவறில்லை என நிரூபித்ததால் தடையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் பிசிசிஐ இவரை அணியில் எடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஸ்ரீசாந்த் விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக போராடி வருகிறார். இவர் மீது விழுந்த கருப்புப் புள்ளியினால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதே உண்மை. இருப்பினும் விட்டுக்கொடுக்காமல் 36 வயதாகியும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் கூறுகையில், நான் இதுவரை சூதாட்டத்தில் ஈடுபட்டது இல்லை. நேர்மையான முறையில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியில் இடம்பெற்று, அங்கும் என்னால் முடிந்ததை செய்தேன். கிரிக்கெட்டை முழு மூச்சாக கொண்டிருக்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவேண்டும் என ஒருநாளும் நினைத்ததில்லை. அதை நான் செய்யவும் மாட்டேன்.
ஒரு கால் இல்லாமல் தவிக்கும் தாய், கடந்த சில வருடங்களாக நோயால் அவதிப்பட்டு உயிருக்கு போராடி வரும் தந்தை, மற்றும் எனது மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினர் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் நான் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை. அதை நான் நிரூபித்து விட்டேன். இருப்பினும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் இந்திய அணியில் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆடி வருகிறார்கள். சிலர் ஆடிவிட்டு ஓய்வும் பெற்று விட்டார்கள். ஆனால், இவர்கள் விரித்த வலையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இந்த கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அதை வெளியிடுவது சரியான முறை அல்ல. அவர்களை கண்டறிய சட்டங்கள் இருக்கின்றது. நான் மனதளவில் வலிமை கொண்டவன். அதனால் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். நிச்சயம் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று உறுதியுடன் பேட்டியளித்தார்.
-vicky