அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிதியுதவி- தமிழக அரசு

 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிதியுதவி- தமிழக அரசு

நெசவாளர்கள் மீனவர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக தினக்கூலி பெறுபவர்கள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள் மீனவர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ttn

மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கியது. கிட்டத்தட் 45 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்துக் கொண்டே இருப்பதால், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.83 கோடியை ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 8.39 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.