அமைச்சர் முன்னிலையில் அடித்து மாய்ந்துகொண்ட அதிமுக தொண்டர்கள்: திண்டுக்கல்லில் சலசலப்பு!

 

அமைச்சர் முன்னிலையில் அடித்து மாய்ந்துகொண்ட அதிமுக தொண்டர்கள்: திண்டுக்கல்லில் சலசலப்பு!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிசாசன் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மேடை அருகே வந்து, அங்கன்வாடி ஊழியர் நியமனத்தில் தங்கள் ஆதரவாளர்களுக்கு பணியிடம் ஒதுக்கவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

admk

ஒரு கட்டத்தில், இரு தரப்பாக பிரிந்த தொண்டர்கள், சேர் உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி மோதலில் ஈடுபட்டனர். அமைச்சர் முன்பு நடைபெற்ற இந்த தள்ளுமுள்ளு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

admk minister

இதையடுத்து, அங்கிருந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் தொண்டர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.