அமைச்சர் கருப்பண்ணன் பதவியை பறிக்க வேண்டும்… அதிமுக-வில் கொந்தளிப்பு

அமைச்சர் கருப்பண்ணன் பதவியை பறிக்க வேண்டும்… அதிமுக-வில் கொந்தளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கருப்பண்ணனுக்கும், பெருந்துறை அ.தி.மு.க எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வெற்றிபெறுவதை கருப்பண்ணன் தடுத்துவிட்டார் என்று கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்தது.

நடந்து முடிந்த ஊராட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பலரின் தோல்விக்கு காரணமாக இருந்த அமைச்சர் கருப்பண்ணன் பதவியை பறிக்க வேண்டும் என்று கட்சிக்குள் கலகக்குரல் எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் கருப்பண்ணனுக்கும், பெருந்துறை அ.தி.மு.க எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலத்துக்கும் இடையே கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வெற்றிபெறுவதை கருப்பண்ணன் தடுத்துவிட்டார் என்று கட்சிக்குள் குற்றச்சாட்டு எழுந்தது.

minister-karuppannan-01

இந்த நிலையில், பெருந்துறை ஒன்றிய தலைவர் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றியை தடுக்க முயன்றதாக அமைச்சர் மீது சொந்த கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். பெருந்துறை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 12 இடங்களில், அ.தி.மு.க ஐந்து இடங்களிலும், தி.மு.க 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள நான்கு இடங்களையும் அதிருப்தி அ.தி.மு.க உறுப்பினர்கள்தான் சுயேட்சைகளாக நின்று வென்றிருந்தனர். இந்த சுயேட்சைகள் கருப்பண்ணன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
ஐந்து இடங்களில் வெற்றி பெற்றதால் நிச்சயம் அ.தி.மு.க தான் அங்கு தலைவர் பதவியை பெறும் சூழ்நிலை. ஆனால், சுயேட்சையாக வெற்றிபெற்ற ஒருவரை தலைவராக தேர்வு செய்ய கருப்பண்ணன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

Thoppu-venkatesan

இதை அறிந்த தோப்பு வெங்கடாசலம் 7வது வார்டில் அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றி பெற்ற சாந்தி என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்தார். இப்படி கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சிக்கு எதிராக செயல்படும் கருப்பண்ணன் ஈரோடு மாவட்டச் செயலாளராக நீடித்தால் நடைபெற உள்ள மாநகராட்சி, நகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெற முடியாது என்று ஈரோடு மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு புகார் மனு அளித்துவருகின்றனர். ஒற்றைத் தலைமை இல்லாத சூழ்நிலையில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் எல்லாம் குறுநில மன்னர்களாக மாறிவரும் சூழலில், நடவடிக்கை என்பதைப் பற்றி எல்லாம் ஓ.பி.எஸ், இபிஎஸ் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று சிரிக்கின்றனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.