அமேசானின் 900 கோடி பித்தலாட்டம்?! இனியாவது ஏமாறாதீங்க மக்களே!

 

அமேசானின் 900 கோடி பித்தலாட்டம்?! இனியாவது ஏமாறாதீங்க மக்களே!

அமேசானின் விற்பனை முடிவதற்குள்ளாகவே அவர்களிடம் வாங்கிய பொருட்கள் எல்லாம் தரத்தில் பிதுங்கி நிற்கிறது

ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் சமீபகாலங்களாக தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது. தொட்டுப் பார்த்து, தரம் பரிசோதித்து வாங்குவது எல்லாம் மலையேறி போச்சு. கண்களை கவரும் வண்ணங்களில்,  தள்ளுபடி விலை என ஆசை காட்டி தரமில்லாத பொருட்களை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுவதையே பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் செய்து வருகின்றன.

amazon

விழாகால சிறப்பு விற்பனையை சில நாட்களுக்கு முன்பாக தொடங்கிய அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் 900 கோடிகளுக்கும் மேல் வியாபாரம் செய்து கல்லா கட்டியது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் அமேசானின் தள்ளுபடி விற்பனை முடிவுற்றதும் முகநூல் முழுக்க, இந்த பொருள் சரியில்லை… பத்தாயிரத்துக்கு வாங்கினேன் வேலை செய்யவில்லை என்கிற புலம்பல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும். ஆனாலும் மக்களின் மனதில் தள்ளுபடி விலையில் தரமில்லாத பொருட்கள் கிடைக்கிறது என்பது புரிவதேயில்லை. இந்த வருஷம் இன்னும் கொடுமை.. அமேசானின் விற்பனை முடிவதற்குள்ளாகவே அவர்களிடம் வாங்கிய பொருட்கள் எல்லாம் தரத்தில் பிதுங்கி நிற்கிறது என்கிற கூக்குரல்களும், புலம்பல்களும் முகநூல் முழுக்கவே நிறைந்திருக்கிறது.
இதையெல்லாம் படிச்சு பார்க்க அமேசான் நிறுனத்திற்கு எங்கே நேரமிருக்கப் போகிறது.

 

rooban

தீபாவளி தள்ளுபடி விற்பனைக்காக அசுர வேகத்தில் தரமில்லாத பொருட்களை சந்தைப்படுத்தும் முனைப்பில் ஆன்லைன் நிறுவனங்கள் கனஜோராய் இந்நேரம் இறங்கியிருக்கும்.
அமேசானின் தரமற்ற சேவைக்கு உதாரணமாய் எழுத்தாளர் திரு.ரூபனின் முகநூல் பதிவு உங்கள் பார்வைக்கு அப்படியே… 

bag

என் மனைவி Wildcraft_bags ஒன்றை 29.09.2019ல் Amazon India ல் ஆர்டர் செய்தாள். 02.09.2019ல் பேக் வந்து விட்டது.

bag

மறுநாள் அதை எடுத்துக் கொண்டு அலுவலகம் ( சென்னை உயர்நீதிமன்றம்) போய் விட்டாள். உள்ளே ஒரு 1/2 லிட்டர் தண்ணீர் பாட்டில், ஒரு குடை, பர்ஸ், ஐடி.கார்டு அவ்வளவு தான். காலையில் முதல் தடவை திறந்து மூடும் போதே ஒரு ஜிப் ரன்னரில் இருந்த வளையங்கள் அறுந்து விட்டன.

amazon

மாலை,வரும் போது மறு முனையில் இருந்த வளையங்களும் அறுந்து விட்டன. இந்த அழகில் வியாபாரம் நடக்கும் போதே ,நம் மக்கள் 900 கோடிக்கு ஒரே நாளில் பொருட்கள் வாங்கிக் குவித்து விட்டதாக குதூகளிக்கிறார் நிம்மி! 
இனியாவது நம்பி மோசம் போகாதீங்க மக்கா…!