அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது

 

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா: அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரபல அமெரிக்க கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரையன்ட் கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், தனது மகள் ஜியானாவை போட்டியில் பங்கேற்க வைக்க கடந்த 26-ஆம்தேதி ஹெலிகாப்டரில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கோபே பிரையன்ட் (41), ஜியானா (13) உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ttn

இந்த நிலையில், கோபே பிரையன்ட் சென்ற ஹெலிகாப்டர் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கோபே பிரையன்ட் மற்றும் 9 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு இயந்திர கோளாறு காரணம் அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் பாகங்களையும், கண்காணிப்பு கேமராவில் சிக்கியிருந்த காட்சிகளையும் விரிவாக ஆய்வு செய்ததில் அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரானது சம்பவத்தின்போது மேகமூட்டத்தில் புகுந்ததாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த சில நொடிகளில் தீப்பிழம்பாக தரையில் விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.