அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்; 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

 

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்; 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது

வாஷிங்டன்: நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படாததால் அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்ப 500 கோடி டாலர் நிதி கேட்டு அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் அந்நாட்டின் செனட் அவை  ஒத்திவைக்கப்பட்டது.

எனவே, அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், செலவினங்களுக்கு நிதி இல்லாமல் நாட்டில் அனைத்துத் துறைகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனநாயாகக் கட்சியின் எம்.பி.க்களும், குடியரசுக் கட்சியின் எம்.பி.க்களும் பேச்சுவார்த்தை நடத்னார்கள். அதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், இன்றிரவு முதல் அமெரிக்க அரசு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முடங்கும் என தெரிகிறது.

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் (Shutdown) என்பது மத்திய அரசுக்கு கட்டுப்பட்ட சேவைகள் அனைத்துக்கும் ஊதியம் அளிக்க பணம் இல்லாமல் நிறுத்திவைக்கப்படும். அத்தியாவசிய பணிகளாக போலீஸ், ராணுவம் தவிர அனைத்தும் முடங்கும்.

கடந்த 2013-ஆம் ஆண்டுக்கு பின் அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம் தற்போது 4-வது முறையாக மீண்டும் ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், இந்த பிரச்னைக்கு குடியரசுக் கட்சியினர் ஒருவரும் காரணமல்ல. நாங்கள் எந்த காரணம் கொண்டும் ஷட்டவுனுக்கு ஆதரவில்லை. நிர்வாக முடக்கம் நீண்ட காலம் நீடிக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.