அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் ஆப்-க்கு தடை

 

அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் ஆப்-க்கு தடை

அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலியால் பல்வேறு நாடுகளில் பல சிக்கல்கள், பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. அதைப் பயன்படுத்தும் பலர் அநாகரீகமான முறையில் சமுதாயத்தில் நடந்து கொள்வதுடன், அந்த செயலிக்கு முழுவதுமாக அடிமை ஆகின்றனர். இதனால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாட்டில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ttn

இந்த நிலையில், அமெரிக்க அரசு அலுவலகங்களில் டிக்டாக் செயலியை தடை செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீனா உளவு பார்க்கலாம் என்பதால் டிக்டாக்கை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.