அமெரிக்க அதிபர் பதவிக்கு தூதுவிட்டனர் என தினகரன் நம்பவைப்பார்: ஆர்.பி உதயகுமார் அதிரடி

 

அமெரிக்க அதிபர் பதவிக்கு தூதுவிட்டனர் என தினகரன் நம்பவைப்பார்: ஆர்.பி உதயகுமார் அதிரடி

அமெரிக்க அதிபர் பதவி காலியாக உள்ளது அதற்கு நீங்கள்தான் தகுதி என தூதுவிட்டனர் என்று டிடிவி தினகரன் நம்பவைப்பார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: அமெரிக்க அதிபர் பதவி காலியாக உள்ளது அதற்கு நீங்கள்தான் தகுதி என தூதுவிட்டனர் என்று டிடிவி தினகரன் நம்பவைப்பார் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரதில் நடைபெற்ற அதிமுக கட்சி ஊழியர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டிடிவி தினகரன் பலம் இழந்தவர், செல்வாக்கு இழந்தவர், ஊடகத்துறை கவனத்தை திருப்ப செயல்படுகிறார். நிகழ்ந்த சந்திப்பு குறித்து உடனே கூறாமல் அதன் மூலம் பயன் பெற பிளாக் மெயில் செய்கிறார். அவர் ஒரு பிளாக் மெயிலர்.

அமெரிக்க அதிபர் பதவி காலியாக இருக்கிறது. அதற்கு நீங்கள்தான் தகுதியானவர் என என்னிடம் தூதுவிட்டனர் என்றும் டிடிவி தினகரன் நம்பவைப்பார் என்றார்.