அமெரிக்க அதிபர் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

 

அமெரிக்க அதிபர் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை போலவே அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மாநாட்டில் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

ttn

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டிரம்ப்பிடம் கேட்கப்பட்டபோது, தான் அதற்காக கவலைப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸுக்கு பயந்து எந்த அரசியல் பேரணியையும் தனது நிர்வாகம் ரத்து செய்யாது என்றும் டிரம்ப் கூறினார்.