அமெரிக்க அதிபருக்கு 2-வது முறை கொரோனா சோதனை – மீண்டும் நெகட்டிவ் ரிசல்ட்!

 

அமெரிக்க அதிபருக்கு 2-வது முறை கொரோனா சோதனை – மீண்டும் நெகட்டிவ் ரிசல்ட்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு நடத்தப்பட்ட 2வது கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு நடத்தப்பட்ட 2வது கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்கா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்து 3-வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நாட்டில் 976க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 245,193 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10403 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.

ttn

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-க்கு 2வது முறையாக கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக டிரம்ப்புக்கு நடத்தப்பட்ட முதல் கொரோனா சோதனையிலும் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்றே உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மத்தியில் அந்த சோதனை அவருக்கு நடத்தப்பட்டிருந்தது.