அமெரிக்காவை அதிரவைத்த மரண மாஸ்! திறமையை வெளிப்படுத்திய இந்திய இளம்படை!!

 

அமெரிக்காவை அதிரவைத்த மரண மாஸ்! திறமையை வெளிப்படுத்திய இந்திய இளம்படை!!

அமெரிக்காவில் மரண மாஸ் பாடல் ஒளிபரப்பாக்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மரண மாஸ் பாடல் ஒளிபரப்பாக்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி பொங்கலுக்காக விருந்தளிக்கப்பட்ட படம் பேட்ட. இப்படத்தில் இடம் பெற்றுள்ள மரண மாஸ் என்ற அறிமுக பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும்,பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இணைந்து பாடியிருந்தார்.

வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் ட்ரெண்ட் ஆனதுடன், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பாடல் அமெரிக்காஸ் காட் டேலேண்ட் என்ற ரியால்ட்டி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக்கப்பட்டது.  குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் மேடையான அந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வர். அப்படி இந்தியாவிலிருந்து சென்ற குழு ஒன்று மரண மாஸ் பாடலை அந்த மேடையில் அதிர செய்துள்ளது.

 

 

இந்நிலையில் சமீபத்தில் மும்பையிலிருந்து சென்ற “வி அன்பீட்டபிள்” குழு ஒன்று அந்த போட்டியில் கலந்து கொண்டு மரண மாஸ் பாடலுக்கு நடனமாடியது. அமெரிக்க நிகழ்ச்சியில் மரண மாஸ் பாடல் ஒலிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

இதனை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், ஆஹா! வி அன்பீட்டபிள் குழுவின் டான்ஸ், நம்பமுடியாத மற்றும் மனதை கவரும் வகையில் இருந்தது. அமெரிக்காவில் தலைவரின் மரண மாஸை ஒலிக்க வைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார். 

 

 

இதேபோல் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், “அமெரிக்காவின் காட் டேலண்ட் ஃபைனல்களில் அற்புதமான திறமையை வெளிப்படுத்திய கலைஞர்களை பாருங்கள்!” என குறிப்பிட்டுள்ளது.