அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் 1435 பேர் உயிரிழப்பு

 

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் 1435 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் 1435 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் 1435 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 34 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 11 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவில் பரவினாலும் தற்போது அந்த நாட்டில் பெருமளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

USA

ஆனால் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஈரான், பெல்ஜியம், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மிக அதிகளவில் உள்ளது. குறிப்பாக கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா உள்ளது.

USA

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67,444-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் 11 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் 1435 பேர் உயிரிழந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இதை உறுதி செய்துள்ளது. அதனால் நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் இது இரண்டு சதவீதம் அதிகமாகும்.