அமெரிக்காவில் மனைவியுடன் திரைப்படம் பார்த்து ரசித்த விஜயகாந்த் – வைரல் புகைப்படம்!

 

அமெரிக்காவில் மனைவியுடன் திரைப்படம் பார்த்து ரசித்த விஜயகாந்த் – வைரல் புகைப்படம்!

‘க்வாமேன்’ திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

சென்னை: ‘க்வாமேன்’ திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். சிகிச்சைக்காக அவர் அவ்வப்போது வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சமீபத்தில் கூட அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வந்தார். விஜயகாந்த் விரைவில் முழு குணமாகி முன்பு போல் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என தேமுதிக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  சமீபத்தில் கூட உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அக்வாமேன் திரைப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்கில் கண்டு மகிழ்ந்ததாகத் தனது மனைவி பிரேமலதா உடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முன்னதாக விஜயகாந்த் தனது நண்பர்களுடன் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.