அமெரிக்காவில் புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்!! 2020இல் மற்ற நாடுகளை அச்சுறுத்த திட்டமா?

அமெரிக்காவில் புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்!! 2020இல் மற்ற நாடுகளை அச்சுறுத்த திட்டமா?

அமெரிக்காவில் இன்று புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. எரிசக்தி துறை மற்றும் அணுசக்தி துறையில் பல தொழில்நுட்ப மேம்பாடுகளை கொண்டுவர அமெரிக்கா அரசு இந்த புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தை திறந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களது துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. இதில் முதன்மையானதாக கடந்த சில ஆண்டுகளாக விளங்குவது அணுசக்தி ஆராய்ச்சி ஆகும்.

தமிழகத்தில் கல்பாக்கம் பகுதியில் அணுசக்தி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று அமெரிக்காவிலும் இன்று புதிய அணுசக்தி ஆராய்ச்சி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

 இந்த அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய செயல்பாடாக, அணுசக்தி துறை மற்றும் அணு உலைகளில் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து அவற்றை பரிசோதித்து அதன் உற்பத்தித் திறனை கண்டறிவது ஆகும். இதன் மூலம் அணுசக்தி ஆராய்ச்சியில் புதிய உச்சத்தை அடையலாம். 

இந்த ஆராய்ச்சிக்காக 2020 ஆம் நிதியாண்டில் ஐந்து மில்லியன் டாலரை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது. இதில் முதன்மை திட்டமாக, மிகச் சிறிய அளவிலான மாடுலர் உலை மற்றும் மைக்ரோ அளவிலான அணு உலைகளை செயல்படுத்தி பரிசோதிப்பதாகும்.

இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் ரிக் பெரி கூறுகையில், “அணுசக்தி ஆய்வு மையங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஒன்றிணைத்து, அவற்றை தற்போதிருக்கும் கண்டுபிடிப்புகள் ஓடு ஒப்பிட்டு செயல்பட்டால் மாணவர்களின் திறனும் பல கண்டுபிடிப்புகளும் வெளிக்கொணரப்படும். இதன் மூலம் அமெரிக்காவின் அணு சக்தி பல மடங்கு மேம்படும்” என்றார்.