அமெரிக்காவில் தமன்னாவுக்கு காதலர்?

 

அமெரிக்காவில் தமன்னாவுக்கு காதலர்?

நடிகை தமன்னாவிற்கு அமெரிக்காவில் காதலர் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சென்னை: நடிகை தமன்னாவிற்கு அமெரிக்காவில் காதலர் இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா, தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்திருக்கிறார். இது தவிர ‘தேவி 2’ உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கிலும் 3,4 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் ‘கண்ணே கலைமானே’ டிவி புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, ரசிகர் ஒருவர் தமன்னாவை புரொபோஸ் செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை உதயநிதி ஸ்டாலின், ’தமன்னாவிற்கு அமெரிக்காவில் காதலர் இருப்பது தெரியுமா?’ எனக் கேட்டு அந்த ரசிகரை ஆஃப் செய்துள்ளார். உண்மையில் தமன்னாவிற்கு தொழிலதிபருடன் காதலா இல்லை இது உதயநிதி விளையாட்டாக சொன்ன விஷயமா என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.