அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கேப்டன்… வைரலாகும் புகைப்படம்

 

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கேப்டன்… வைரலாகும் புகைப்படம்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இதனால் அவரது மகன் விஜயபிரபாகரன் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்கிடையே தனது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த அண்மையில் அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் சென்றுள்ளார். ஆனால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன.

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது நண்பர்களுடன் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.