அமெரிக்கான்னா சும்மாவா? ஒரே இடத்தில் பத்தாயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்!

 

அமெரிக்கான்னா சும்மாவா? ஒரே இடத்தில் பத்தாயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்!

ஒரு டன், ரெண்டு டன் அல்ல, 20 டன் கோகெய்ன் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது கடந்த 230 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாம். முன்னதாக இந்தக் கப்பல் பஹாமாஸில் இருந்தும், சிலியிலிருந்தும் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.

பத்தாயிரம் கண்டெய்னர்களை ஒரே நேரத்தில் கையாளும் திறன் கொண்ட சுவிட்சர்லாந்து தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான‌ எம்.எஸ்.சி. கயான் என்ற சரக்குக் கப்பல், கடந்த வாரம் அமெரிக்காவின் ஃபிலடெல்பியா துறைமுகத்திற்கு வந்தது. அக்கப்பலில் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைக்கவே, அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் களத்தில் அதாவது கப்பலில் இறங்கி சோதனையிட்டனர். வழக்கம்போல ஐம்பது – நூறு கிலோ கணக்கில் போதைப்பொருள் சிக்கும் என நினைத்தால், 20 டன் அளவிற்கு கொகைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

MSC Gayane

ஒரு டன், ரெண்டு டன் அல்ல, 20 டன் கோகெய்ன் ஒரே நேரத்தில் கைப்பற்றப்பட்டிருப்பது கடந்த 230 ஆண்டுகளில் இதுவே முதன்முறையாம். முன்னதாக இந்தக் கப்பல் பஹாமாஸில் இருந்தும், சிலியிலிருந்தும் பொருட்களை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கப்பலில் இருந்த 8 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே நிறுவனத்துக்குச் சொந்தமான கார்லோட்ட என்ற கப்பலில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் நேவார்க் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது ஒன்றரை டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் நிதி மற்றும் வங்கித்துறைகளில் பேர்பெற்ற நிறுவனமான ஜே.பி.மார்கன் நிறுவனம்தான் மேற்படி இரண்டு கப்பல்களுக்கும் உரிமையாளர்.