அமிர்தசரஸ் கையெறி குண்டு தாக்குதல்: தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு

 

அமிர்தசரஸ் கையெறி குண்டு தாக்குதல்: தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிகழத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிகழத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில காவல்துறை அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அட்லிவால் கிராமத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் நுழைந்த மர்ம நபர்கள், பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற ஆசிரமத்தின் முன் பகுதியில் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல்கள் அளிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் மாநில காவல்துறை அறிவித்துள்ளது. அதேசமயம், தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.