அமித்ஷா பதவி விலக வேண்டும்… ராகுல் தலைமையில் காங். எம்.பி-க்கள் போராட்டம்!

 

அமித்ஷா பதவி விலக வேண்டும்… ராகுல் தலைமையில் காங். எம்.பி-க்கள் போராட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷங்களை எழுப்பினர்.

டெல்லியில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் டெல்லி கலவரம் பற்றி பேசியதால் அவை நடவடிக்கைகள் முடங்கின. அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எம்.பி-க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

delhi parliment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷங்களை எழுப்பினர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் கண்களைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்று கோஷமிட்டனர்.

amit shah resign

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் நோட்டீஸ் அனுப்பின.இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அலுவல் நேரம் தொடங்கியது. அப்போது,எதிர்க்கட்சி எம்.பி-க்கள் டெல்லி கலவரம் தொடர்பாகவும் 43 பேர் மரணம் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்.அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. மக்களவை தொடங்கிய 6வது நிமிடம் அவை பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 

delhi parliment soniya

மாநிலங்களவையில் காங்கிரஸ்,தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கோஷங்களை எழுப்பின.இதனால் அவையை 2 மணி வரைக்கும் ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு.தொடர்ந்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் காந்தி தலைமையில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.