அமித்ஷாவின் அடுத்த டார்க்கெட்… மாமியாரை மருமகனுடன் திஹாருக்கு அனுப்ப அதிரடி..!

 

அமித்ஷாவின் அடுத்த டார்க்கெட்… மாமியாரை மருமகனுடன் திஹாருக்கு அனுப்ப அதிரடி..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறது சிபிஐ வட்டாரம்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறது சிபிஐ வட்டாரம்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். முதலில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் சிபிஐ மூலம் கைது செய்யப்பட்டார்.

Robert

சிபிஐ வழக்கில் இன்று ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை வழக்கில் அவர் கண்டிப்பாக கைது செய்யப்படுவார். அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.

அதேபோல் பண மோசடி, வரி ஏய்ப்பு, கருப்பு பணம் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காங்கிரஸ் மூத்த தலைவர் டி கே சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முதல்நாள் அமலாக்கத்துறை மூலம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு செப்டம்பர் 13ம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் பிரபல நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குதாரர்களாக உள்ளனர்.Robert

இந்த நிறுவனத்தில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனம் மூலம் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர்.

ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்குதான் நடந்து வருகிறது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிதான் இந்த வழக்கை தொடர்ந்தார். இது தொடர்பாக விரைவில் சிபிஐ வழக்கு பதிய வாய்ப்புள்ளது.

அதன்படி சிபிஐ அல்லது அமலாக்கத்துறை இரண்டும் ராகுல் மற்றும் சோனியா மீது வழக்கு பதியலாம். பின் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருவதால் இதுவும் விரைவில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Robert

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தரப்பு தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வரும் நாட்களில் பெரிய அளவில் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா மீதான வழக்கிலும் அவரை திஹாருக்கு அனுப்ப அமித் ஷா அதிரடி காட்டி வருகிறார்.