அமமுக ஒரு கட்சியே இல்லை: டிடிவி தினகரனை வறுத்தெடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

 

அமமுக ஒரு கட்சியே இல்லை: டிடிவி தினகரனை வறுத்தெடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

அமமுக என்பது ஒரு கட்சியே இல்லை என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: அமமுக என்பது ஒரு கட்சியே இல்லை என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அக்கட்சியில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாளை தினகரனே திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சித்திருந்தார்.

ttv dhinakaran

இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முதிர்ச்சி இல்லாதவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அமமுகவில் இருந்து தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து கொள்ளலாம் என ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். அது தான் எங்களின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. அமமுக என்பது ஒரு கட்சியே இல்லை. அது ஒரு கோஷ்டி. அதை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை” என தெரிவித்துள்ளார்.