அப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது?

 

அப்ப‌டி என்ன ஸ்பெஷல் மண்பாண்டங்களில் சமையல் செய்யும்போது?

மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டவை. மிக முக்கியாக, மண்பாண்டச் சமையல் அதிக எண்ணெயைக் கோராது. எப்பவுமே இல்லாட்டியும் எப்பயாச்சும் ஒருமுறையாச்சும் மண்பாண்ட சமையல் ட்ரை பண்ணுங்க.

அரிசியை களைஞ்சு தண்ணீ ஊத்தி குக்கர்ல வச்சோமா,  விசில் அடிச்ச உடனே இறக்குனோமான்னு இல்லாம, யாராச்சும் மண் பானையில சமைப்பாங்களா என்ற இளக்காரம் புதிதல்ல. ஒரு சின்ன கேள்வி. குழந்தை வளர்ப்பில், அதற்குத் தேவையான நல்ல சாப்பாடு, படிப்பதற்கு காஸ்ட்லியான பள்ளி, போய்வர வண்டி ஏற்பாடு செய்தாகிவிட்டது. இதற்குமேல் குழந்தை வளர்ப்பில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை, அதுவாக வளர்ந்துகொள்ளவேண்டும் என எந்த தாய் தந்தையாவது ஒதுங்குவதுண்டா? இல்லைதானே? காரணம், அக்கறை. அதுபோலதான், அரிசிய குக்கர்ல போட்டு, ஸ்டவ்வ பத்த வச்சாப் போதும் சோறு வெந்திடும் என நினைப்பதும். மண் பாண்டங்களில் செய்யும் சமையலில் கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது. அதுவே கூடுதல் ருசிக்கும் காரணமாகிறது.

Mud pot cooking

அதுமட்டுமா? பனிக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகம் கலந்து இருக்கும். இதனால் நீர் ஆவியாவது குறைகிறது. எனவே, பானையில் இருக்கும் நீரும் குறைந்த அளவே குளிர்ச்சி அடைகிறது.  மண்பாண்டங்கள் கழுவுவதற்கு எளிதானவை. எனவே எந்த ரசாயனப் பொருள்களைக் கொண்டும் கழுவ வேண்டாம். மண்பானையில் நிறைய நுண் துளைகள் இருக்கும். இதன் மூலம் நீராவி, உணவுக்குள் சீராக ஊடுருவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஃப்ரிட்ஜில் இருக்கும் நீர் பனிக்கட்டி ஆவது போல, பானையில் இருக்கும் நீர் ஆகாது. மண்பாண்டங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமன்படுத்தும் தன்மை கொண்டவை. மிக முக்கியாக, மண்பாண்டச் சமையல் அதிக எண்ணெயைக் கோராது. எப்பவுமே இல்லாட்டியும் எப்பயாச்சும் ஒருமுறையாச்சும் மண்பாண்ட சமையல் ட்ரை பண்ணுங்க.