அப்பா சென்ட்டிமென்ட்னா என்னான்னு தெரியுமா?

அப்பா சென்ட்டிமென்ட்னா என்னான்னு தெரியுமா?

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அறிமுகம் தேவையில்லை. பிரபல திமுக குடும்ப உறுப்பினர், முன்னாள் அமைச்சரின் சகோதரி என கட்சி அடையாளங்கள் இல்லாமல்கூட சுயமாக புகழ்வெளிச்சம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்தன்மையால் நாடாளுமன்ற தேர்தலில் சீட் பெற்று, வென்றும் காட்டியுள்ளார்.

தேர்தலில் முதன்முறையாக, அதுவும் நாடாளுமன்ற தேர்தலில், அதுவும் தென்சென்னை மாதிரியான முக்கிய தொகுதியில் நின்று, வென்று, பெருமகிழ்வோடு வீட்டுக்கு வந்து பெற்ற தந்தையிடம் அந்த மகிழ்ச்சியை  பகிர்ந்துகொள்வதற்கும், ஃபிரேமுக்குள் இருக்கும் அப்பாவின் போட்டோவுக்கு முன்நின்று வணங்குவதற்கும் உள்ள வித்தியாசம்தான் எவ்வளவு அடர்த்தியானது!

தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அறிமுகம் தேவையில்லை. பிரபல திமுக குடும்ப உறுப்பினர், முன்னாள் அமைச்சரின் சகோதரி என கட்சி அடையாளங்கள் இல்லாமல்கூட சுயமாக புகழ்வெளிச்சம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர் என பன்முகத்தன்மையால் நாடாளுமன்ற தேர்தலில் சீட் பெற்று, வென்றும் காட்டியுள்ளார்.

Thamizhachi Thangapandiyan

வெற்றிக்குப்பிறகு, முதன்முறையாக சொந்த ஊரான விருதுநகரின் மல்லாங்கிணறுக்கு சென்ற தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு தடபுடல் வரவேற்பு. தாய் மற்றும் சகோதரருடன் தந்தை தங்கபாண்டியன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியவருக்கு, முட்டிக்கொண்டு வந்தது கண்ணில். தகப்பன் கைபிடித்து நடந்தது முதல் எல்லாமும் நினைவிற்கு வந்திருக்கும்போல, கண்கலங்கிவிட்டார். மகளின் வெற்றியைக் கண்டு பெருமிதம் கொள்ள, கணவன் கண்முன் இல்லை என்ற கவலை, தமிழச்சியின் தாய்க்கு வந்து கண்ணீர் பெருக்கெடுக்க, தங்கம் தென்னரசு இருவரையும் சமாதானப்படுத்தியது கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.