“அப்பாவுடன் போட்டோ வெளியிட்ட சவுந்தர்யா”… கந்து வட்டி கபாலி என்று கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

 

“அப்பாவுடன் போட்டோ வெளியிட்ட சவுந்தர்யா”… கந்து வட்டி கபாலி என்று கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

மோடியை தொடர்ந்து MAN VS WILD நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதற்காக படப்பிடிப்பு பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு இருந்தது.

மோடியை தொடர்ந்து MAN VS WILD நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதற்காக படப்பிடிப்பு பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு இருந்தது.

 

பியர் கிரில்ஸுடன் ரஜினி  இரண்டு  நாட்கள் கலந்துகொண்டார்.அவருடன் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்  கலந்துகொண்டார். 

இந்நிலையில் MAN VS WILD நிகழ்ச்சியில் ரஜினி தனது மகளுடன் போட்டோ எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தை சவுந்தர்யா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை கண்ட ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

 

ஆனால் ஒருசிலரோ, கந்து வட்டி கபாலி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்று பங்கமாகக் கலாய்த்து வருகிறார்கள். காரணம்  கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினி 18% வட்டிக்கு கடன் கொடுப்பதாகச் செய்தி  வெளியானதேயாகும்.