‘அப்டேட் கேட்க இது சரியான நேரமில்லை’: நேசமணியை முதல்ல காப்பத்துங்க.. தளபதி 63 தயாரிப்பாளர் நகைச்சுவை ட்வீட்!

 

‘அப்டேட் கேட்க இது சரியான நேரமில்லை’: நேசமணியை முதல்ல காப்பத்துங்க.. தளபதி 63 தயாரிப்பாளர் நகைச்சுவை ட்வீட்!

தளபதி 63 படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்குப் படக்குழு வித்தியாசமாகப் பதிலளித்துள்ளார்.

சென்னை: தளபதி 63 படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்குப் படக்குழு வித்தியாசமாகப் பதிலளித்துள்ளார்.

மூன்றாவது முறையாக அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. பெண்கள் கால்பந்தை மையமையாக வைத்து உருவாகிவரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இப்படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தினமும் படத்தின் அப்டேட் விடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

archana

இந்நிலையில் விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனது சமூகவலைத்தளபக்கத்தில் படம் குறித்த அப்டேட் கேட்ட ரசிகர்களுக்குப் பதிலளித்துள்ளார். அதில், இப்போது ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கேட்க சரியான நேரமல்ல, நேசமணிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி #Pray_For_Neasamani என்ற ஹேஸ்டேக்கை குறிப்பிட்டுள்ளார்.

விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள காமெடியை மையப்படுத்தி #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.