அன்புமணியை தோற்கடிக்க அதிரடி வியூகம்… வன்னியரை வைத்தே ஆட்டம் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

 

அன்புமணியை தோற்கடிக்க அதிரடி வியூகம்… வன்னியரை வைத்தே ஆட்டம் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அன்புமணியை வீழ்த்த சபதமேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அதற்காக புது வீயூகம் ஒன்றை அமைத்துள்ளார். 

தர்மபுரி : தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், அன்புமணியை வீழ்த்த சபதமேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அதற்காக புது வீயூகம் ஒன்றை அமைத்துள்ளார். 

ராமதாஸுக்கு வெட்கமில்லையா?

ramadoss

பாமக எப்படியும் தங்களது கூட்டணிக்கே வரும் எனக் காத்திருந்தார் மு.க.ஸ்டாலின். பாமக பெரும் டிமாண்டுகளை வைக்க, திமுக தயங்கிய நிலையில் அதிமுகவில் இணைந்தது பாமக. இது மு.க.ஸ்டாலின் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ராமதாஸுக்கு வெட்கமில்லையா? எனக் கேட்டு கடுப்படித்தார் ஸ்டாஸ்லின். அதிமுகவை விட பாமகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஸ்டாலின். 

அதிரடி வியூகம்

stalin

இந்த நிலையில், தருமபுரி தொகுதியில் களமிறங்கி உள்ள ராமதாஸ் மகன் அன்புமணியை தோற்கடித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் . அதற்காக அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகியுள்ள செல்வகணபதியிடம் அந்த அசைண்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதியும், ராமதாஸும்

selvaganapathy

கடந்த, 1999ல் நடந்த, மக்களவை தேர்தலில், சேலம் தொகுதியில், திமுக – பாமக கூட்டணி சார்பில், வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியிட்டார். அவருக்கு போட்டியாக, அதிமுக, சார்பில், செல்வகணபதியை களமிறக்கினார் ஜெயலலிதா. இருவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், வன்னியர் சமுதாயத்திற்கு எதிராக, கருணாநிதியும், ராமதாஸும் செயல்பட்டதை செல்வகணபதி முன்னிலைப்படுத்தினார். 

ஸ்டாலின் உத்தரவாதம்

stalin

இதனால், வன்னியர் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள், அதிமுக – திமுக என சிதறின. மற்ற சமுதாயத்தினர் அதிகமாக உள்ள பகுதிகளில், பாமகவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தி, அந்த தேர்தலில், செல்வகணபதி வெற்றி பெற்றார். அதே பாணியில், அன்புமணியை வீழ்த்துவதற்கு செல்வகணபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணியை ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார். அன்புமணியை வீழ்த்தி காட்டினால், சேலத்தில், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், உங்களுக்கு தரப்படும் என, செல்வகணபதியிடம், ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்க: பொன்னியின் செல்வனில் சத்யராஜ்: பாகுபலியால் கிடைத்த மாஸ் ரோல் இது தான்!?