அன்பழகன் உடல்நிலை… மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்!

 

அன்பழகன் உடல்நிலை… மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்!

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு வயது காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகள் இருந்து வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நேற்றும் இன்றும் அப்போலோ மருத்துவமனை சென்று அன்பழகன் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று இரவு முதல் கண் திறக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

anbazhagan-09

மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனைக்குத் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். இன்று காலை வழக்கம் போல அறிவாலயம் சென்று கொண்டிருந்த தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு, நேராக அப்போலோ சென்றுவிட்டு பிறகு அறிவாலயம் புறப்பட்டார். 98 வயதான அன்பழகன் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றி அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று கூறப்படுகிறது.