அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள்

 

அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள்

தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல போராட்டங்களை நடத்திய அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் இன்று.

சென்னை:  தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல போராட்டங்களை நடத்திய அன்னை சத்தியவாணி முத்து பிறந்தநாள் இன்று.

அன்னை சத்தியவாணி முத்து, 1923-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பிறந்தார்.டாக்டர் அம்பேத்கரால் தொடங்கப்பட்டு வட மாவட்டங்களில் செல்வாக்கோடு திகழ்ந்த அகில இந்திய ஷெட்யூல்டு காஸ்ட் பெடரேஷனில் இணைந்து பணி செய்தார். 

தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக  தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவங்கினார்.  தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார்.

சத்தியவாணி முத்து 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். 1953-ல் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடி சிறை சென்றார். 1959-1968 காலகட்டத்தில் திமுகவின் கொள்கை விளக்கச் செயலாளாராகப் பதவி வகித்தார். 1957-ஆம் ஆண்டு சுயேட்சையாகவும், 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகவும் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.